யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, சில புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். இந்த நடைமுறை உடனடியாக அமுலுக்கு வருகிறது.
நோயாளர்களை பார்வையிட வருபவர்கள், நோயாளிகளிற்கு சிகிச்சையளிப்பவர்கள் என- வைத்தியசாலை விடுதிகளிற்குள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இதேவேளை, வைத்தியசாலையின் அன்றாட செயற்பாடுகளை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் வழமைக்கு கொண்டு வர முடியுமென வைத்தியசாலை நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது













0 Comments
No Comments Here ..