"புனர்பூ யோகம்" என்பது சந்திரன் வலுப்பெற்று அதாவது அவர் ஆட்சி உச்சம், திக்பலம்,திருக் பலத்தில் வலுவான குருவின் பார்வையாலும்,சுய ஒளி என்ற வளர் பிறை சப்தமித் திதிக்குப்பின் உள்ள சந்திரன்,தேய்பிறை திருதியை வரை உள்ள சந்திரன் என்று சந்திரனின் நிலையை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் ஏதோ ஒரு நிலையைச் சந்திரன் பெற்று சனியுடன் அவர் தொடர்பு கொள்ளும் போது இது புனர் பூ யோகம் என்றாகும்.
ஆனால் சந்திரனை விட சனியின் பலம் குறைவாக இருக்கவேண்டும்.இப்படி இருக்கும்போது சனியின் இணைவோ பார்வையோ குறைகளைத் தந்தாலும் உள்ளுணர்வில் ஏதோ ஒன்று அழுத்திக் கொண்டே இருந்து, தவறான போக்கிற்கு அல்லது தவறான செயலைச் செல்லும் முன் அது தடுத்துவிடும்.பின்நாட்களில் அப்படிச் செய்யாமல் இருந்தது எவ்வளவு பெரிய நல்லது என்று உணர வைக்கும்.
மேலும் குரு இவ்விருவரையும் விட வலுவாக இருந்து இவர்களுடன் இருக்கும்போதோ தொடர்புகளின் மூலம் இருவரையும் கண்காணிக்கும் போதோ, குருவின் காரகங்களில் உள்ள நபர்கள் குழந்தை, ஆசிரியர்,ஆலோசகம், கடவுள் பக்தி, விட்டுக் கொடுக்கும் இயல்பு,விசாலமான எண்ணம்,அந்தஸ்து உள்ள நல்ல மனம் படைத்தவர்,பொருளாதாரம் என்று ஏதோ ஒன்றில் புனர் பூ தோஷமானது புனர்பூ யோகமானதாகி விடுகிறது.அதிகமான ஒளியுள்ள சந்திரனுடன் வலுக்குன்றிய சனி தொடர்பு கொள்ளும் போதும் இவ்வாறே சந்திரனின் காரகங்களில் ஒன்றில், அல்லது அவரின் சில காரகங்களால் புனர்பூ வானது சனியின் காரகங்களான ஆயுள், உழைப்பு,அரசியல்,கீழ்படிதல்,அடங்கிப் செல்லுதல், பொறுமை,காலம் தாழ்த்துவது,வேலையாட்கள்,உடல் அங்கஹீனமுள்ளவர், வயோதிகர்கள், தாழ்வு மனம், இப்படி இவரின் காரகங்களில் ஏதோ ஒன்றில் உயரத்தில் கொண்டு சென்று ஒருவருக்கு புனர் பூ யோகம் கொடுத்து விடுதுங்க.
இவ்வாறு சனி சந்திரன் அல்லது இவர்களுடன் சேரும் வலுவுள்ள சுபர் ஆகியோரின் காரகத்துவங்களிலோ, இவர்களின் கலப்பு காரகத்துவங்களின் நன்மைகள் மூலமாகவோ இந்த "புனர்பூ" யோகத்தால்,யோகம் தருகிறது..
இப்படி புனர்பூவானது, புனர்பூ தோஷம், புனர்பூ யோகம் என்று இரு வித வித்தியாசமான யோக நிலைகளுடன்தான் ஒருவரின் கட்டத்தில் பூக்கிறது.
நன்றிங்க நன்றிகளுடன்..













0 Comments
No Comments Here ..