14,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

2020 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 7 நாட்களுக்குள் வௌியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுத்தாரதர பத்திர சாதாரண தரபரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.



இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.குருணாகல் மலியதேவ முன்மாதிரி வித்தியாலயத்திற்கு கல்வியமைச்சர் விஜயம் செய்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.


நாளை நடைபெறவுள்ள கல்வி பொதுத்தரதார சாதாரணதர பரீட்சைக்கான ஏற்பாடுகளை அவதானித்த அமைச்சர், பரீட்சை முடிவுகளை ஜூன் மாதத்தில் வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சை ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்படும். அத்துடன் கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.


இதற்கமையவாக செப்டெம்பர் மாதத்தில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் கல்வி அமைச்சர அங்கு மேலும் கூறினார்..


பரீட்சை நிலையங்களில் இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டது. பரீட்சார்த்திகளின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.




உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு