25,Apr 2024 (Thu)
  
CH
ஆரோக்கியம்

ஆர்கானிக் முறையில் ஓர் உணவுத் தேடல்...

அண்மைக் காலமாக ஆர்கானிக் உணவுப் பொருட்களின் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. ஆர்கானிக் என்றால் என்ன? ஆர்கானிக் மூலம் விளைந்த உணவுப் பொருளை கண்டறிவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஆர்கானிக் உணவுப் பொருள் எவை என்பதை கண்டறிவது எப்படி என்று உயிர் ஆர்கானிக் பார்மஸ் மார்க்கெட்டின் சேர்மன் பிரபு சங்கர் கூறுவதாவது: ஆர்கானிக் என்பது பூமியின் தோல் பகுதி போன்றது. அண்மைக்காலமாக அதன் தோல் பகுதி அழிந்து வருவதால் மட்டுமே இந்த ஆர்கானிக் என்ற வார்த்தை நமக்கெல்லாம் தெரிய வந்தது.

​இயற்கை விவசாயம்

50 அல்லது 60 வருடங்களுக்கு முன்னர் விவசாயத்துக்கு இயற்கை உரங்களும், கால்நடைகளின் கழிவுகளும் மட்டுமே உதவியது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் உணவுப் பொருட்களை அதிகம் விளைவிக்க பல செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தி பூமியின் தோல் பகுதியை நாமெல்லாம் நாசமாக்கி வைத்துள்ளோம். சுருக்கமாக சொல்லப்போனால் பூமி தற்போது தோல் இல்லாத உடலைப் போன்றே உள்ளது. அதனை சரி செய்ய மீண்டும் இயற்கை முறை விவசாயம் போன்ற ஆர்கானிக் முறையே சரியானது. அதனால் தான் தற்போது ஆர்கானிக் விவசாய முறை மீண்டும் பிரபலமாகி வருகிறது.


ஏன் ஆர்கானிக்?

பூமியின் தோல் பகுதியான ஆர்கானிக்கை கெடுத்து வைத்துள்ளோம். அதனை ,மீட்டு எடுக்க ஆர்கானிக் முறையே மீண்டும் செய்வதன் மூலம் மட்டுமே அது சாத்தியமாகும்.

தமிழகத்தில் 1 லட்சத்து 33 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஆனால், அதில் தற்போது 60 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே விவசாயம் நடந்து வருகிறது. மீதமுள்ள நிலங்கள் இன்னும் ஆர்கானிக் முறையிலே விவசாயம் செய்யக்கூடிய வகையிலே உள்ளது. அதாவது அந்த நிலங்களில் எந்தவித செயற்கை ரசாயன உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ தெளிக்காத நிலங்களாகவே உள்ளது.

​ஆர்கானிக் உணவு முறை ஏன்?

செயற்கை ரசாயனம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களையே நாம் ஆர்கானிக் உணவு என்று அழைக்கிறோம். இயற்கை முறையில் பயிரிடப்படும் இந்த உணவுப் பொருட்களால் பூமியின் உடல் பாதுகாக்கப்படுவதோடு, நமது உடலும் காக்கப்படுகிறது. இம்முறையின் மூலம் பயிரிடப்படும் உணவுகளில் இயற்கையாகவே அமைந்துள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. இந்த உணவுப் பொருட்களை எங்கு உற்பத்தி செய்கிறார்கள், எப்படி உற்பத்தி செய்கிறார்கள் என்பதை தேடி வாங்க வேண்டும்.


​ஆர்கானிக் உணவின் நன்மைகள்

ஆர்கானிக் முறை நாம் பழங்காலத்தில் பயன்படுத்திய முறையே. இதனையே மேற்கொள்வதன் மூலம் சத்தான உணவுகளோடு, ரசாயனம் தெளித்த உணவுகளில் இருந்து நாமும் விலகிச் செல்லலாம். ரசாயனம் தெளித்த உணவு வகைகளை உண்ணுவதால் ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து நாம் தப்பிக்கலாம். மேலும், இயற்கை முறை வேளாண்மை செய்வதால் இயற்கை சுற்றுச் சூழலும், கனிம வளங்களும் பாதுகாக்கப்படுகின்றன.




ஆர்கானிக் முறையில் ஓர் உணவுத் தேடல்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு