மதுரையில் உள்ள நடராஜர், இடது காலை ஊன்றி, வலது காலை தூக்கி நடனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார். இதற்கான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
பக்தனுக்காக கால் மாறி நடனம் ஆடிய நடராஜர்
நடராஜர்
பொதுவாக நடராஜர் வலது காலை ஊன்றி, இடது காலை தூக்கி நடனமாடும் கோலத்தில்தான் காட்சியளிப்பார். ஆனால் மதுரையில் உள்ள நடராஜர், இடது காலை ஊன்றி, வலது காலை தூக்கி நடனமாடும் கோலத்தில் காட்சி தருகிறார்.
மதுரையை ஆட்சி செய்த ராஜசேகர பாண்டியன் என்பவன், நடனம் கற்று வந்தான். ஒருமுறை இத்தல நடராஜரைப் பார்த்தவனுக்கு, ஒரு வருத்தம் உண்டானது. அவன் “இறைவா.. நான் நடனம் கற்கும்போதுதான், அதில் உள்ள கஷ்டத்தை அறிந்தேன். நீயோ காலம் காலமாக வலது கால் ஊன்றி, இடது காலை தூக்கி நடனமாடி வருகிறாய். எனக்காக கால் மாறி ஆடக் கூடாதா?” என்று கேட்டான். தன் பக்தனுக்காக நடராஜர் இத்தலத்தில் கால் மாறி நடனம் புரிகிறார். பஞ்ச சபைகளில் இது, வெள்ளி சபை ஆகும்.
0 Comments
No Comments Here ..