தொற்றுநோயை நிர்வகிப்பது குறித்து சுகாதாரத் துறை மற்றும் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் வெளியிட்ட கருத்துக்களை புறக்கணிப்பதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் கொவிட் தொற்று இறப்புகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயரும் அபாயம் காணப்படுவதாக இலங்கையின் உயர் வைத்திய நிபுணர்கள் ஒருமித்த குரலில் எச்சரித்துள்ளனர்.
சுகாதாரத் துறையில் நன்கு அறிந்த தொழிற்சங்கங்களால் சுதந்திரமாக தொழில்சார் கருத்துக்களை வெளியிடுவதற்கு அரசாங்கம் தடையாக அமைந்துள்ளதாக, 20 பொது மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கவும், மக்களின் உயிரைப் பாதுகாக்கவும் நிலைமையைப் புரிந்துகொள்வதற்கும் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெறுவது அரசாங்கத்தின் பொறுப்பாக காணப்பட்டாலும், அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.
தொற்றுநோயை நிர்வகிக்க அரசாங்கம் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என, அமைப்பின் இணை இணைப்பாளர் ரஞ்சன் சேனாநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..