இஸ்ரேல் முன்னெடுத்துவரும் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகம் செயல்பட்டு வந்த 13 மாடி கட்டிடம் தரைமட்டமாகியுள்ளது.
குறித்த தாக்குதலில் 10 சிறார்கள் உட்பட 38 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக அந்த 13 மாடி கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதனிடையே காசா முனைக்கு 80 போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும், எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ டாங்கிகளுக்கான உதவிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மட்டுமின்றி காசாவில் உள்ள இன்னொரு பலமாடி கட்டிடமும் பெரும் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. டசின் கணக்கான கிளர்ச்சியாளர்களை கொன்றொடுக்கியதாகவும் கட்டிடங்களை தாக்கியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, காசா நகரில் கட்டிடங்கள் மீது இஸ்ரேல் முன்னெடுத்துள்ள தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக பீர்ஷெபா மற்றும் டெல் அவிவ் நோக்கி 210 ராக்கெட்டுகளை வீசியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..