03,May 2024 (Fri)
  
CH
ஆரோக்கியம்

ஆவி பிடித்தல் நம்மை கொரோனாவிலிருந்து காக்குமா...

ஆவி பிடித்தல் வைத்தியம் மூலம் கொரோனாவை ஒழிக்கமுடியும் என்பது எந்த அளவுக்கு உண்மையானது?

ஜலதோஷமோ, காய்ச்சலோ உடனடி நிவாரணத்துக்கு நம்மில் பெரும்பாலானோர் தேடிச் செல்லும் கை வைத்திய முறை `ஆவி பிடித்தல்'. அதுவும் இந்த கொரோனா காலத்தில் மாஸ்க், சானிடைசர்போல ஆவி பிடித்தலையும் ஒரு தற்காப்பு முறையாகவே பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.

`ஆவி பிடித்தல்' யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளக் கூடிய எளிமையான வைத்திய முறைதான். என்றாலும், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு முறையற்ற, அலட்சியமான போக்கில் ஆவி பிடிக்கும்போது காயங்கள், கொப்புளங்கள், அலர்ஜி போன்ற சில விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து மருத்துவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கொரோனாவுக்கான தீர்வுகள் என்ற பெயரில் தவறான செய்திகளும் தகவல்களும்தான் சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவுகின்றன. அவற்றில் ஒன்று,`நீராவி பிடித்தால், உடலுக்குள் இருக்கும் கொரோனா வைரஸை அழித்துவிடலாம்' என்பது.

இந்த ஆவி பிடித்தல் வைத்தியம் மூலம் கொரோனாவை ஒழிக்கமுடியும் என்பது எந்த அளவுக்கு உண்மையானது என்பதை அறிய, நுரையீரல் மருத்துவர் பிரசன்ன குமார் தாமஸை அணுகினோம்.

``முதல் விஷயம், கொரோனா வைரஸ் என்பது, சாதாரண சளித்தொந்தரவல்ல. சாதாரண சளியும் கொரோனா வைரஸ் தொற்றும் உடலுக்குள் ஏற்படுத்தும் தாக்கமும், பாதிப்பும் வெவ்வேறாக இருக்கும். சொல்லப்போனால், இரண்டுக்கும் அறிகுறிகளேகூட வேறுபடும். கோவிட் ௧9 பாதிப்பில் மூக்கொழுதல், வறண்ட இருமல், தலைவலி, வாசனையை அறியும் திறன் குறைவு போன்ற கூட்டு அறிகுறிகள் இருக்கும். சில நேரங்களில், அறிகுறிகளே இல்லாமல்கூட ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம்.

நீராவி பிடித்தல் சிகிச்சைக்கு கீழ்கண்ட மூலிகைதழைகளை பயன்படுத்தலாம்

ஆடாதொடா 

வேப்பிலை 

துளசி 

கற்பூரவல்லி 

சீந்தில் 

குப்பைமேனி

நொச்சி 

சீதாபழ இலை 

கோரைப்புல் 

எலுமிச்சை இலை

பீநாறி சங்கு இலை 

வசம்பு இலை அ கிழங்கு 

சுக்குப்பொடி 

மிளகு பொடி 

காபி பொடி 

வெற்றிலை 

பப்பாளி இலை

கீழாநெல்லி 

இவைகளில் குறைந்தது ஆறு இலைகள் 

மற்றும் பொடிகளை பயன்படுத்தலாம்

நாளொன்றுக்கு இரண்டு முறைக்கு மேல் மிகாமல்

இன்டக்‌ஷன் ஸ்டவ்வில் குக்கர் வைத்து போர்வையால் முழு உடம்பும்பட வேர்வை ஆவி பிடிக்கலாம்

நண்பர்களுக்கும் பகிருங்கள்



உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஆவி பிடித்தல் நம்மை கொரோனாவிலிருந்து காக்குமா...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு