18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

மண்சரிவு வௌ்ள அனர்த்த எச்சரிக்கை

சீரற்ற காநிலை காரணமாக களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு மற்றும் வௌ்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தினால் இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ,குக்குல் கங்க மற்றும் சிறு ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால், புலத்சிங்ஹல, பாலிந்தநுவர, மில்லனிய மற்றும் ஹொரண உள்ளிட்ட பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புலத்சிங்ஹல, பாலிந்தநுவர, அகலவத்த, வலல்லாவிட்ட, இங்கிரிய, மத்துகம மற்றும் தொடங்கொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரதேச செயலாளர் பிரிவுகளை அண்மித்து காணப்படும் பகுதிகளில் வாழும் மக்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிலத்தில் வெடிப்பு ஏற்படுதல், நிலம் தாழிறங்கல் மற்றும் திடீரென ஊற்று உருவாதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அதிகக் கவனம் செலுத்துமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




மண்சரிவு வௌ்ள அனர்த்த எச்சரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு