29,Apr 2024 (Mon)
  
CH
ஆன்மிகம்

இந்த மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லுங்கள்...

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தொழில் விருத்தி பெறவும், தொழில் ரீதியான பகைவர்களின் சூழ்ச்சிகளையும் முறியடிக்க மகா அவதாரம் நரசிம்ம மந்திரத்தை தினமும் உச்சரிக்கலாம்.

எல்லா இடத்திலும் எதிலும் வெற்றி காண விரும்புபவர்கள் நரசிம்மர் உடைய இந்த மந்திரத்தை தினமும் 9 முறை உச்சரித்து வரலாம். ஒரு சிலருக்கு உத்தியோக ரீதியான எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். நீங்கள் முன்னேற நினைத்தால் அதற்கு முட்டுக்கட்டையாக வந்து நிற்பார்கள். உங்கள் மீது பொறாமை பட்டு நீங்கள் எடுக்கும் விடாப்பிடியான முயற்சிகளில் தடையாக இருப்பார்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தொழில் விருத்தி பெறவும், தொழில் ரீதியான பகைவர்களின் சூழ்ச்சிகளையும் முறியடிக்க மகா அவதாரம் நரசிம்ம மந்திரத்தை தினமும் உச்சரிக்கலாம். தன் மீது அளவற்ற பக்தி கொண்டுள்ள எவரையும் இவர் கைவிடுவதில்லை. நரசிம்மர் பார்ப்பதற்கு உக்கிர தெய்வமாக இருந்தாலும் உண்மையில் உள்ளத்தில் குழந்தை மனம் படைத்தவர் என்கிறது ஆன்மீகம்.

கீழ்வரும் நரசிம்மர் உடைய மூலமந்திரத்தை தினமும் உங்களுடைய பூஜை அறையில் மகாவிஷ்ணுவின் படம் அல்லது பெருமாளுடைய படம் வைத்து உச்சரிக்க வேண்டும். படத்திற்கு துளசி மாலை சாற்றி, சந்தன, குங்கும திலகமிட்டு கையில் அட்சதை வைத்துக் கொண்டு தொடர்ந்து 9 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு கையில் இருக்கும் அட்சதையை எடுத்து சாமி படத்தின் முன்பு போட்டு விட வேண்டும்.

நரசிம்மர் மூல மந்திரம்:

ஓம் ஹ்ரீம் ஜய ஜய லக்ஷ்மீப்ரியாய நித்யப்ரமுதீதசேதஸே

லக்ஷ்மீஸ்ரிதார்த தேஹாய க்ஷ்ரெளம் ஹ்ரீம் நமஹ!!

இப்படி செய்து விட்டு நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம். எல்லா வகையிலும் உங்களுக்கு தொல்லைகளை கொடுத்துக் கொண்டிருக்கும் சில துஷ்ட துரோகிகளை மற்றும் பகைவர்கள் தொல்லைகளை ஒழிக்க இதை விட சிறந்த பரிகாரம் எதுவுமே இருக்க முடியாது என்று கூறலாம்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





இந்த மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லுங்கள்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு