02,May 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

தடுப்பூசி போட்டுக்கொண்ட 120 வயதில் மூதாட்டி

ஜம்மு-காஷ்மீரில் தனது 120 வயதில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு பாட்டி ஒருவர் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி ஒன்றே கொரோனாவை ஒழிக்க ஒரே வழி என்பதால் அதற்கான விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியில் அரசு இறங்கி உள்ளது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தனது 120 வயதில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு பாட்டி ஒருவர் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். உதம்பூர் மாவட்டம் கதியாஸ் என்ற கிராமத்தை சேர்ந்த தோலி தேவி என்ற மூதாட்டிக்கு 120 வயதாகிறது. இந்த தள்ளாத வயதிலும் சுறுசுறுப்புடன் இருக்கும் அவர் மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

தடுப்பூசி போட்டதால் தனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை, அதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மூதாட்டி உற்சாகமாக கூறினார்.

எனவே முதலில் தயக்கம் காட்டிய கிராம மக்கள் எல்லோரும் பாட்டி தடுப்பூசி போட்டுக்கொண்ட உடன் கூட்டம் கூட்டமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

மூதாட்டியின் செயலால் கவரப்பட்ட வடக்கு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி மற்றும் ராணுவ அதிகாரிகள் தோலி தேவி பாட்டியின் வீட்டுக்கு நேரடியாக சென்று கிராம மக்கள் முன்னிலையில் அவரை கவுரவித்தனர்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





தடுப்பூசி போட்டுக்கொண்ட 120 வயதில் மூதாட்டி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு