02,May 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

வீடு, வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி திட்டம்

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமத்தை தவிர்ப்பதற்காக அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய ஊசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் முகாம்களில் சென்று போட்டுக்கொள்ளலாம்.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி இருக்கிறது. தொற்று அதிகமாகி வருவதால் மக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது.

இதனால் தடுப்பூசி போட காத்திருக்க வேண்டி உள்ளது. இந்தநிலையில் சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிரமத்தை தவிர்ப்பதற்காக அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் இன்று தொடங்கி வைத்து சிலருக்கு ஊசி போடுவதை பார்வையிட்டார்.

மாநகராட்சி மருத்துவ ஊழியர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவார்கள். இந்த திட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.

நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




வீடு, வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி திட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு