27,Nov 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தலா? அரசாங்கம் வெளியிட்ட தகவல்

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகளின் பிரகாரம் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தற்போது எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த அறிக்கையில்,


அமெரிக்க வெளியுறவுத்துறையினால் வழக்கமாக வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 4ஆம் நிலை பிரிவு பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.


கொவிட்-19 அவசர நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக இவ்வாறான அமெரிக்க பயண ஆலோசனை வழங்கப்படுகிறது என்றபோதிலும் இவ் எச்சரிக்கையில் பயங்கரவாதம் அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளது.


அத்துடன், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் இலங்கை தொடர்பில் நிலை 03 முதல் நிலை 04 வரையிலான பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமை கருதி வழங்கப்படுவதாகவும் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. 


இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகளின் பிரகாரம் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தற்போது எந்த அறிக்கையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துக் கொள்கின்றது - என்றுள்ளது.   





இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தலா? அரசாங்கம் வெளியிட்ட தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு