இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான 7 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதுடன், 900 பேர் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் பொலிஸ் பரிசோதகர்கள், உதவி பொலிஸ் பரிசோதகர்கள், சார்ஜென்ட்கள் மற்றும் கான்ஸ்டபிள்கள் அடங்குவதாக பொலிஸ்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளில் பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரையில் 5187 பொலிஸ் அதிகாரிகள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 4197 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..