28,Nov 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

கொழும்பில் தீப்பற்றி எரிந்த கப்பலால் அமில மழை பெய்யும் ஆபத்து

கொழும்பு துறைமுகத்தில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் முழுமையாக அழிந்தால் இலங்கையில் அமில மழை பெய்யும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மழையுடன் அமில மழை பெய்யும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் சிறிலங்கா கடல் கட்டமைப்பு உட்பட முழு சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கப்பலில் உள்ள இரசாயணங்கள் காரணமாக நீண்டகால பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என ஆணையத்தின் தலைவர் எஸ்.அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கப்பலுக்குள் நைட்ரிக் எசிட் 25 டன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கப்பலின் 1,487 கொள்கலன்கள் உள்ள நிலையில் அவை 74,000 டன் நிறைகளை கொண்டுள்ளதென அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கடலில் விழும் பொருட்களை மக்கள் தொடுவதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதன் ஆபத்துக்கள் குறித்து இன்னமும் ஆராயப்படுகின்ற நிலையில் மக்கள் இதனை கையில் எடுப்பதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.








கொழும்பில் தீப்பற்றி எரிந்த கப்பலால் அமில மழை பெய்யும் ஆபத்து

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு