எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றத்தவறும் பட்சத்தில் யூன் முதலாம் திகதி நண்பகல் 12.00 முதல் 1.00 மணிவரை அடையாள பணிப் புறக்கணிப்பு செய்ய சங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே தங்கள் வைத்தியசாலைகளில் இக் கோரிக்கைகளை வென்றெடுக்க அனைத்து தாதியர்களையும் ஒன்றிணைத்து தயார்படுத்துமாறு என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தினால் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அக்கோரிக்கைகள் பின்வருமாறு,
1. தாதிய உத்தியோகத்தர்களின் குடும்பத்தினருக்கும் ஏனைய சுகாதாரத் துறையினரின் குடும்பத்தினருக்கும் கோவிட் தடுப்பூசி ஏற்றல்.
2. அனைத்து தாதியருக்கும் ரூபா 5000 ரூபா இடர் கொடுப்பனவு வழங்குதல்
3. புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 4000 தாதிய உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றல்
0 Comments
No Comments Here ..