01,Nov 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கொரோனா நெருக்கடி நிலையில் இராணுவ தளபதியின் முக்கிய தகவல்

தற்போதைய கொரோனா நெருக்கடிக் காலங்களில் ஊடகங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

இன்றைய கொரோனா நெருக்கடியான காலகட்டத்தில் உண்மைத்தகவல்கள் பொதுமக்களுக்கு சென்றடைவது உறுதிச்செய்யப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பாதகமான தகவல்களை வெளியிடும் ஊடகத்தளங்கள் குறித்து ஜனநாயக சமுதாயத்தில் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடிகள் தொடர்பான உண்மைகளைப் பற்றிய போதுமான புரிதலுடன், ஊடகங்கள் செயற்படவேண்டும். இதன்போது சமநிலை மற்றும் பகுப்பாய்வு தகவல்கள் சமூகத்திற்கு கிடைக்கும் என்று இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

ஜெனரல் சவேந்திர சில்வா, வெகுஜன மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்புகளுக்கான சர்வதேச மாநாட்டில் ஸூம் தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாற்றும் போதே இராணுவத்தளபதி இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கொரோனா நெருக்கடியின்போது பொதுமக்களின் எதிர்மறையான கருத்துக்கள் இடையூறாகவே உள்ளன. ஊடகங்கள் மத்தியில் எந்த தகவல்களை பரிமாறக்கூடாது என்பதைக்காட்டிலும் ஊடகங்கள் மத்தியில் போட்டியிடும் தன்மையே சூழ்நிலைகளே உள்ளன.

எந்த நாட்டிற்கும் ஒரு நெறிமுறை மற்றும் நம்பகமான ஊடக கலாசாரம் இருப்பது மிக முக்கியம், எனவே நெருக்கடிகளின் போது, ஊடகங்கள் பொது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியில் ஈடுபட முடியும்.

இந்தநிலையில் நெருக்கடியான தருணங்களில் ஊடகங்கள் உத்தியோகபூர்வமான தரப்புகளில் இருந்து தகவல்களை பெறுகின்றபோது மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தவிர்க்கமுடியும் என்றும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.








கொரோனா நெருக்கடி நிலையில் இராணுவ தளபதியின் முக்கிய தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு