கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சைனோபார்ம் தடுப்பூசி மருந்தின் ஒரு குப்பியை 15 டொலர்களுக்கு கொள்வனவு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கடந்த 24 ஆம் திகதி அமைச்சரவையில் தாக்கல் செய்த பத்திரத்திற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
15 டொலர்கள் என்ற விலையில் சீனாவிடம் இருந்து 14 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
இதனிடையே சைனோபார்ம் தடுப்பூசி மருந்து பங்களாதேஷ் நாட்டுக்கு 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 15 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்ய பங்களாதேஷ் அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.
சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி மருந்துகள் ஏனைய நாடுகளுக்கு சுமார் 45 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
0 Comments
No Comments Here ..