மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் மூன்றாவது அலை காரணமாக 1199 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 08 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
நேற்று இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளைத் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பதற்கான சிபார்சினை தேசிய கோவிட் செயலணிக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மாவட்ட அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்கள், பயணக் கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதன் மூலமே இந்த தொற்றினை கட்டுப்படுத்தமுடியும் எனவும் இதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும் அரசாங்க அதிபர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்குப் பத்தாயிரம் மற்றும் ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..