கண்டி – பல்லேகெலே முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த 74 தொழிலாளர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டு, மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வாந்தி மற்றும் தலைவலி ஆகிய நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஏற்கனவே கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த நோய் நிலைமைக்கும், தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் 64 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில், உணவு ஒவ்வாமையே, இந்த நோய்க்கான காரணமாக இருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களிடையே காணப்பட்ட அறிகுறிகளானது, உணவு ஒவ்வாமைக்கான அறிகுறிகள் என பணிப்பாளர், நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..