எதிர்வரும் 8ம் திகதி முதல் இலங்கையர்களுக்கு பிரித்தானியா செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழையும் நாடுகளின் சிவப்பு பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இன்று, நாளை (06) மற்றும் நாளை மறுநாள் (07) லண்டனுக்கு விமானங்களை முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த தடை பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியா செல்லும் இலங்கையர்கள் கட்டாயம் இந்த நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா செல்லும் பயணிகள் மூன்று நாட்களில் ( 72 மணி நேரம்) கோவிட் தொடர்பான சோதனை மேற்கொண்டு எதிர்மறையான முடிவை பெற்றிருக்க வேண்டும்.
பிரித்தானியா செல்லும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள ஹோட்டலை (அங்கிகாரம் பெற்ற) முன்பதிவு செய்திருக்க வேண்டும். இதில் விடுதி, போக்குவரத்து மற்றும் கோவிட் பரிசோதனை என்பன அடங்கும்.
பயணிகள் வரும்போது அவர்கள் எங்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற விவரங்களுடன் பயணிகள் locator படிவத்தை (பி.எல்.எஃப்) பூர்த்தி செய்ய வேண்டும்.
இதேவேளை, அண்மையில் கோவிட் பெருந்தொற்று ஆபத்து காணப்படும் சிகப்பு பட்டியலைக் கொண்டு நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..