03,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

தமிழ்நாடு அரசின் உயர்மட்ட குழுவில் திருநங்கை டாக்டர் நர்த்தகி நட்ராஜ்

இந்திய அரசியலில் முதல் முறையாக "தமிழ்நாடு அரசின் உயர்மட்ட குழுவில்" #திருநங்கை டாக்டர் " நர்த்தகி நட்ராஜ்" நியமனம்

ஆம், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராக முனைவர் நர்த்தகி நடராஜ்-ஐ நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாடு வளர்ச்சி கொள்கைக் குழுவை திருத்தியமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி, பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும், பேராசிரியர். இராம. சீனுவாசன் அவர்கள் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு. தீனபந்து ஐஏஎஸ் (ஓய்வு), டி.ஆர்.பி. இராஜா (மன்னார்குடி எம்எல்ஏ), மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் திருநங்கை முனைவர் நர்த்தகி நடராஜனையும் பகுதி நேர உறுப்பினராக நியமித்து முதலமைச்சர் .

பரத நாட்டியத்திற்காக பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது, கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரான நர்த்தகி நட்ராஜ், திருநங்கைகள் முன்னேற்றத்துக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியலில் முதல் முறையாக "தமிழ்நாடு அரசின் உயர்மட்ட குழுவில்" #திருநங்கை டாக்டர் " நர்த்தகி நட்ராஜ்" நியமனம்

ஆம், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராக முனைவர் நர்த்தகி நடராஜ்-ஐ நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

பத்ம ஸ்ரீ விருதுபெற்ற, தேசத்தின் சிறந்த நடன கலைஞர்களில் ஒருவரான நர்த்தகி நடராஜ், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் பல உயரங்களை அடைந்தவர்.

சமூகம் விதித்த அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்தவர். வாழ்வின் தடைகளைத் தகர்க்க நினைப்பவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு உதாரணம்.

 தமிழ்நாட்டில் பரத நாட்டியத்திற்காக பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது, கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரான நர்த்தகி நட்ராஜ்

அன்று உடலளவிலும், மனதளவிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, அதன் மூலம் ஏராளமான ஏளனங்களை அந்தசின்ன வயசிலேயே சந்தித்து முடித்துவிட்டார் நடராஜ்.

கிடைத்த வசவு சொற்களை எல்லாம் பாராட்டுக்களாக மாற்ற முயன்றார். வழியெல்லாம் பாதத்தில் பட்டு கிழிக்கும் முள்பாதைகளை முல்லைப்பூ விரிப்பாக மாற்றியவர்.

நிறைய முதன்மைக்கு சொந்தக்காரர் நர்த்தகி நடராஜ்.

முதல் டாக்டர் பட்டம் பெற்ற திருநங்கை,

முதல் பாஸ்போர்ட் பெற்ற திருநங்கை,

முதல் தேசிய விருது பெற்ற திருநங்கை,

கலைமாமணி விருது பெற்ற திருநங்கை என்ற பெருமைகளை தக்க வைத்து கொண்டுள்ள நர்த்தகி நடராஜ்-க்கு

இன்று , தமிழ்நாடு அரசின் உயர்மட்ட குழு உறுப்பினர்


இன்னும் பல முதன்மைகள் கிடைக்க வாழ்த்துகிறோம்




தமிழ்நாடு அரசின் உயர்மட்ட குழுவில் திருநங்கை டாக்டர் நர்த்தகி நட்ராஜ்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு