சரியான கதைகளே இல்லாமல் வெறும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே ஆபாச வெப் தொடர்களை உருவாக்கி வருவதாக பிரபல நடிகை குற்றம்சாட்டி உள்ளார்.
இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘ஐந்து ஐந்து ஐந்து’ படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் எரிகா பெர்ணான்டஸ். அதன்பின் விரட்டு, விழித்திரு போன்ற படங்களில் நடித்த இவர், தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் பக்கம் போனார். தற்போது அங்கு முன்னணி நடிகை ஆகிவிட்டார்.
குறிப்பாக ‘குச் ரங் பியார் கே ஐஸே பி’ என்ற வெப்தொடரின் 2 சீசன்களிலும் டாக்டர் சோனாக்ஷி போஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். தற்போது அந்த தொடரின் 3-வது சீசனில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை எரிகா பெர்ணான்டசுக்கு மேலும் சில வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், போல்ட் கண்டன்ட் என்ற பெயரில் ஆபாசமாக நடிக்க அவர்கள் சொன்னதால், அதில் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது: “சரியான கதைகளே இல்லாமல் வெறும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே ஆபாச வெப் தொடர்களை உருவாக்கி வருகிறார்கள். எவ்வித காரணமும் இன்றி போல்டாக நடிக்க வேண்டும் என்றால் எப்படி நடிக்க முடியும் என நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடத்தில் பதிலில்லை .
போல்ட் எனும் பெயரில் தேவையில்லாத ஆபாச காட்சிகளை கமர்ஷியல் மற்றும் வியாபார நோக்கத்துடன் திணிப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கதைக்கு தேவைப்பட்டால் அப்படி நடிப்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. ஆனால் வேண்டுமென்றே அத்தகைய காட்சிகளை திணித்து பணம் சம்பாதிக்க நினைத்தால், அதற்கு நான் உடன்படமாட்டேன். அதனால் தான் தேடிவந்த சில வாய்ப்புகளை நிராகரித்தேன்” என அவர் கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..