27,Apr 2024 (Sat)
  
CH
ஆன்மிகம்

பசு புனிதமானதா?

பசுக்கள் நம் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்த உயிரினம். புராணக்கள் முதல் தற்காலம் வரை அரசியலுக்கும் அதிகார வர்கத்திற்கும் உதவும் உயிரினமாக விளங்குகிறது.

மேலைநாட்டினர் இந்தியர்களை பார்த்து பசுவை நீங்கள் கடவுளாக வழிபடுகிறீர்களா? என கேட்பது உண்டு. எந்த தேசத்திலும் இல்லாமல் இந்திய மண்ணில் மட்டும் ஏன் பசுக்கள் முக்கியத்துவம் பெறுகிறது தெரியுமா?

வரலாற்று ரீதியாக பார்த்தால், பணம் என்ற ஒன்று உருவாகும் காலத்திற்கு முன் பசுக்கள் என்பதே பணம் மற்றும் முதலீடாக இருந்து வந்தது. இன்றும் கிராமங்களில் கால்நடை சார்ந்த வாழ்க்கை முறையில் பசுக்கள் முக்கியமான சேமிப்பாக பார்க்கப்படுகிறது.

நம் ஆன்மீக கலாச்சாரத்தில் பிரபஞ்ச ஆற்றலை உள்வாங்கி மேம்படுத்தி நம்மை நோக்கி செலுத்தும் ஆற்றல் பசுக்களுக்கு உண்டு. பசுக்களுக்கு அருகே இருந்து செய்யும் ஜபம் மற்றும் ஆன்மீக பயிற்சிகள் பன்மடங்காக பலன் தருவதை காணலாம். 

பிரபஞ்ச ஆற்றல் பசுக்களின் உடலின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் வெளிப்படும் பொழுது வெவ்வேறு வகையான தன்மையில் செயல்படுகிறது. சூரிய ஒளி முப்பெட்டகத்திற்குள் சென்று ஏழு நிறமாக வெளிப்படுவதை இந்த செயலுக்கு இணையாக கூறலாம்.

இந்திய கலாச்சாரத்திலும் மேலை நாட்டு கலாச்சாரத்திலும் பசுக்கள் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை கீழ்கண்ட படங்களில் புரிந்துகொள்ளலாம்.


மேலை நாட்டில் காணக் கிடைக்கும் பசு பற்றிய படம்.


இந்தியாவில் காணக்கிடைக்கும் பசு படம்.

ஆன்மீக சாதனா என்கிற ஆன்ம பயிற்சிக்கு மிகவும் முக்கியமான பசுக்கள் நாதகேந்திராவில் வேதரிஷிகளின் காலத்தில் இருப்பதை போல பராமரிக்கப்படுகிறது. நாதகேந்திராவின் கோசாலைக்கு வந்து அங்கே இருக்கும் பசுக்களையும் அதன் ஆற்றலையும் உணருங்கள்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




பசு புனிதமானதா?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு