சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இரண்டு பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஹடகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரும், காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 47 வயது நபர், 2018 இல் சஹ்ரான் உட்பட ஐந்து பேருக்கு பாதுகாப்பு வழங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
அவர் கஹடகஸ்திகிலிய துணை தபால் சேவகராகவும் இருந்துள்ளார்.
மேலும், காத்தான்குடியைச் சேர்ந்த 35 வயதுடையவர், தீவிரவாத பிரச்சாரங்களை பரப்பியதாகவும், சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்புப்பிரிவில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..