வடக்கு மாகாணத்தில் மேலும் 144 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று கண்டறியப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 116 பேரும், வவுனியா மாவட்டத்தில் 23 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 03 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் தலா ஒருவர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொற்றுடன் கண்டறியப்படட 116 பேரில் கோப்பாயில் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை பகுதிகளில் தலா 37 பேர் அடங்குகின்றனர்.
0 Comments
No Comments Here ..