03,Dec 2024 (Tue)
  
CH
உலக செய்தி

வெறும் 12 ரூபாயில் சொந்த வீடு

வெறும் 12 ரூபாய்க்கு வீடுகளை விற்பனை செய்து வருகிறது குரோஷியாவை சேர்ந்த லெக்ராட் நகரம்.

சொந்த வீடு வாங்குவது பலருக்கும் பெரும் கனவு. ஆனால், மிக மிக மலிவான விலைக்கு வீடுகளை விற்று வருகிறது

குரோஷியா நாட்டை சேர்ந்த ஒரு சிறு நகரம்.

கடந்த பல ஆண்டுகளாக குரோஷியாவில் உள்ள லெக்ராட் (Legrad) நகரத்து மக்கள் மெல்ல மெல்ல வேறு இடங்களுக்கு வெளியேறிவிட்டனர். இதனால், நகரமே வெறிச்சோடி காணப்படுவதுடன், ஆளில்லாமல் வீடுகள் காலியாக கிடக்கின்றன.

வெறும் ஒரு குனாவுக்கு வீடுகளை விற்பனை செய்து வருகிறது லெக்ராட் நகர. ஒரு குனா என்றால் இந்திய மதிப்பில் சுமார் 12 ரூபாய் மட்டுமே. பழைய வீடுகளை சீரமைப்பதற்கு 25,000 குனா (3 லட்சம் ரூபாய்) வழங்குவதாகவும் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும், வீடுகளை வாங்குவோர் 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும், குறைந்தது 15 ஆண்டுகளாவது லெக்ராடில் தங்குவோம் என உறுதியளிக்க வேண்டும். புதிதாக வருவோருக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்குகின்றனர்.

தெருக்களும் களையிழந்து காணப்படுகின்றன. எனவே, லெக்ராட் நகருக்கு புத்துயிர் கொடுப்பதற்காகவும், மக்களை வரவேற்கவும் நகர நிர்வாகம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, மிக மிக குறைந்த விலைக்கு வீடுகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Croatia Legrand house buy


https://www.croatiapropertysales.com/




உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




வெறும் 12 ரூபாயில் சொந்த வீடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு