வீதியை கடக்க முற்பட்ட சிறுத்தையொன்று விபத்தில் பலியாகியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் A9 வீதியின் தொண்டமான் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தானது இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்திற்கு இலக்கான சிறுத்தையின் தலைப்பகுதியில் காயங்கள் காணப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..