15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

நாட்டில் கொரோனாவினால் மேலும் 57 பேர் மரணம்!

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 57 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் உறுதிப்படுத்தியுள்ளார்.


இதற்கமைய கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,260 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 25 பெண்களும் 32 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.


இதேவேளை, நாளாந்த கொரோனா மரணங்களை உடனுக்குடன் அறிவிப்பதற்கான புதிய பொறிமுறை ஒன்று கையாளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.


அதன்படி, நேற்றுமுதல் நாளாந்தம் கொரோனா காரணமாக மரணிக்கின்றவர்களின் விபரங்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




நாட்டில் கொரோனாவினால் மேலும் 57 பேர் மரணம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு