29,Apr 2024 (Mon)
  
CH
ஆன்மிகம்

பணக்கஷ்டங்களை தீர்க்கும் ஆனி மாத வளர்பிறை அஷ்டமி விரதம்

அஷ்டமி தினங்கள் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவர் ஆன ஸ்ரீ பைரவரை விரதம் இருந்து வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த தினமாக கருதப்படுகிறது.

வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் அஷ்டமி தினங்கள் வருகின்றன. இந்த அஷ்டமி தினங்கள் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவர் ஆன ஸ்ரீ பைரவரின் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அதிலும் ஆனி வளர்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமான தினமாக இருக்கிறது.

ஆனி மாதத்தில் வருகின்ற வளர்பிறை அஷ்டமி சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாகும். வளர்பிறை அஷ்டமி அன்று ராகு கால நேரமான 3 மணியிலிருந்து 4.30 மணிக்குள்ளாக சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் அல்லது சிவன் கோயிலில் இருக்கின்ற சந்நிதிக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி, செவ்வரளி மலர் மாலை சாற்றி, செவ்வாழை நைவேத்தியம் செய்து, தனித்தனியாக ஐந்து வகையான எண்ணெய்கள் ஊற்றிய ஐந்து தீபங்கள் ஏற்றி சொர்ணாகர்ஷண பைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே சொர்ணாகர்ஷண பைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்யலாம்.

மேற்கண்ட முறையில் ஆனி மாத வளர்பிறை அஷ்டமியன்று சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடுபவர்களுக்கு சிறிது காலத்திலேயே எப்படிப்பட்ட பணக்கஷ்டங்களும் நீங்கும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் விரைவில் கட்டி தீர்த்துவிட முடியும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புதிய வீடு, மனை, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப பொருளாதார நிலை உயரும். வீண் செலவீனங்கள் ஏற்படாது. தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





பணக்கஷ்டங்களை தீர்க்கும் ஆனி மாத வளர்பிறை அஷ்டமி விரதம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு