தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிபுணத்துவ டொக்டர் சுதத் சமரவீரவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டொக்டர் சுதத் சமரவீர டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பதில் பணிப்பாளராக நிபுணத்துவ டொக்டர் சமித கினிகே நியமிக்கப்பட்டுள்ளார்.
தொற்று விஞ்ஞானப் பிரிவு சரியான தரவுகளை வெளியிடுவதில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வரும் நிலையில் இந்த அவசர இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை, மரணங்களின் எண்ணிக்கை மற்றும் பரவுகை தொடர்பில் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு சரியான தரவுகளை வெளியிடத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..