29,Mar 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

தமிழ் மிகவும் இனிமையான மொழி

உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப மத்திய அரசுடன் நல்லுறவு பேணுவோம்.

தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழக சட்டசபை இன்று கூடியது. இதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:


* தமிழ் மிகவும் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள்.

* அரசின் ஒவ்வொரு செயலும் சமூக நீதி, ஆண்-பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்படையாக கொண்டிருக்கும்.

* தனக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எவ்வித பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படும்.

* உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப மத்திய அரசுடன் நல்லுறவு பேணுவோம்.

* கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தமிழக அரசுக்கு தேவைப்படும் உதவிகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.

* மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.

* தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும்.

* மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





தமிழ் மிகவும் இனிமையான மொழி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு