13,Feb 2025 (Thu)
04:19:58 AM
  
CH
சமையல்

ஸ்பைசி ஃபிரை ஸ்நாக்ஸ்

குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் வித்தியாசமான ஸ்பைசி ஃபிரை ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம,

தேவையான பொருட்கள்

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - கால் கப்

காய்ந்த மிளகாய் - கால் கப்

வேர்க்கடலை - கால் கப்

பொட்டுக்கடலை - கால் கப்

அரிசி மாவு - 1 கப்

வறுத்த ரவை - கால் கப்

மைதா - கால் கப்

உப்பு - 1 டீஸ்பூன்

எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை

வாணலியில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து வைத்துகொள்ளவும்.

அவை அனைத்தையும் சூடு தணியும் வரை வைத்திருநது அத்துடன் பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் அரை குறையாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடியுடன் சீரகத்தூள், அரிசி மாவு, மைதா மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் எண்ணெய்யை சூடு செய்து மாவுடன் கலந்து கிளற வேண்டும். அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாததி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

அதை சப்பாத்தி போல் தேய்த்து விருப்பமான டிசைன்களில் மாவை துண்டித்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

இப்போது சுவையான மொறுமொறுப்பான ஸ்பைசி ஃபிரை பரிமாறத்தயார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஸ்பைசி ஃபிரை ஸ்நாக்ஸ்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு