21,Nov 2024 (Thu)
  
CH
சமையல்

உடலுக்கு குளிர்ச்சி தரும் புதினா துவையல் செய்யும் முறை

புதினா துவையல் இது இட்லிக்கு சிறந்த ஜோடியாகும். அதோடு மட்டும் இல்லாமல் சாப்பாட்டில் கூட சேர்த்து சாப்பிட உகந்ததாகும். இதனை மிக விரைவாக செய்து விட முடியும்.


புதினா துவையல் செய்ய தேவையான பொருட்கள்:

புதினா – 1/2 கட்டு

தேங்காய் – 1 துண்டு

புளி – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 3

பூண்டு – 6 பல்

உப்பு – தேவையான அளவு


புதினா துவையல் செய்முறை:

முதலில் ஒரு கடாயில் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் புதினா போட்டு அதையும் மேலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு மிக்சி ஜாரில் தேங்காய், காய்ந்த மிளகாய், புளி மற்றும் பூண்டு சேர்த்து அதனுடன் நாம் வறுத்து எடுத்துள்ள புதினாவும் சேர்த்து கொள்ளவேண்டும். பிறகு அதனை நன்றாக அரைக்க வேண்டும். நன்றாக அரைத்து முடித்து வெளியே எடுத்தால் சுவையான புதினா துவையல் தயார்.

சமைக்க ஆகும் நேரம் – 5 நிமிடம்

சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4





உடலுக்கு குளிர்ச்சி தரும் புதினா துவையல் செய்யும் முறை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு