முத்துராமன், தேங்காய் சீனிவாசன் நடிப்பில் கடந்த 1972-ல் வெளிவந்த ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் தற்போது ரீமேக் ஆகிறது.
தமிழில் ஏற்கனவே வெற்றி பெற்ற ரஜினிகாந்தின் பில்லா, தில்லு முல்லு, மாப்பிள்ளை, ஜெமினிகணேசனின் நான் அவனில்லை உள்ளிட்ட படங்கள் ரீமேக் ஆகி உள்ளன. தற்போது காசேதான் கடவுளடா படமும் ரீமேக் ஆக உள்ளது. இந்த படம் 1972-ல் திரைக்கு வந்தது. முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஶ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, லட்சுமி, மனோரமா நடித்து இருந்தனர். சித்ராலயா கோபு இயக்கி இருந்தார்.
படத்தில் இடம்பெற்ற ஜம்புலிங்கமே ஜடாதரா, மெல்ல பேசுங்கள், அவள் என்ன நினைத்தாள், இன்று வந்த இந்த மயக்கம், ஆண்டவன் தொடங்கி போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கை ஆர்.கண்ணன் இயக்குகிறார். இதில் முத்துராமன் கதாபாத்திரத்தில் சிவா, தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் யோகிபாபு, மனோரமாவாக ஊர்வசி நடிக்கின்றனர்.
படம் குறித்து ஆர்.கண்ணன் கூறும்போது, “கொரோனா தொற்றால் மக்கள் மன அழுத்தத்தில் இருக்கும் இந்த காலத்தில் ஓ.டி.டி. தளங்களில் அதிகமாக மர்மம், திகில், கிரைம் படங்களே வருகின்றன. மக்களை சிரிக்க வைக்கும் படைப்பாக காசேதான் கடவுளடா படத்தை நவீன காலத்துக்கு ஏற்ப ரீமேக் செய்கிறோம். காசேதான் கடவுளடா படம் எக்காலத்துக்கும் பொருந்தும் கதையமைப்பை கொண்டது’’ என்றார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..