எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை. தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சிறந்த சேவைகளை மேற்கொண்டு வருகின்றார்.
இரண்டாவது முறையும் ஜனாதிபதி வேட்பாளராக அவரே வருவார் என்பது எனது கணிப்பாகும். இதில் எதிரணியினரின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அவர்களுக்கே தெளிவில்லை என்று கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பெரியநீலாவணை தொடக்கம் நிந்தவூர் வரையிலான பகுதியில் மெரின் ரைவ்ப் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.இன ஐக்கியத்தை பேணுவதற்கு கல்முனைத் தொகுதி பொத்துவில் தொகுதி தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் இத்திட்டத்தை விஸ்தரித்துள்ளோம்.
தற்போது இத்திட்டத்தின் 30 வீதமான வேலைகள் நிறைவடைந்துள்ளன. இவ்வேலைத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் நீதியமைச்சர் அலி சப்றிக்கும் நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன். அதே போன்று இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை வரவேற்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கையை அபிவிருத்தி செய்த பொருளாதார அமைச்சராக கடமையாற்றி நாட்டை கட்டியெழுப்பிய சிறந்த ஆளுமையுள்ளவராவார். எனது தந்தை நாடாளுமன்ற உறுப்பினராக பிரதி அமைச்சராக இருந்த காலத்தில் எமது பிரதேசத்திக்கு பல அபிவிருத்தித் திட்டங்களை கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்தவர், எனது தந்தையோடு நெருக்கமான உறவைப் பேணியவர் பசில் ராஜபக்ஷ.
அவர் இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு சென்றதையிட்டு பெருமகிழ்ச்சி அடைவதோடு வாஞ்சையோடு வாழ்த்துகிறேன்.எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை. தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சிறந்த சேவைகளை மேற்கொண்டு வருகின்றார்.
இரண்டாவது முறையும் ஜனாதிபதி வேட்பாளராக அவரே வருவார் என்பது எனது கணிப்பாகும். இதில் எதிரணியினரின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அவர்களுக்கே தெளிவில்லை என்று கூற வேண்டும். இன்னும் 3 தொடக்கம் 4 வருடங்கள் தான் அவர்களுக்கு எஞ்சியுள்ளது என்பதை ஞாபகமூட்டுகின்றேன்.
வீணாக எம்மை விமர்சித்துக் கொண்டிருக்காமல் 69 இலட்சம் வாக்குகளை பெற இன்றிலிருந்தாவது செயற்பட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த முயலுங்கள் என ஆலோசனை கூற விரும்புகின்றேன். இதை விட இந்த அரசாங்கத்தின் ஆதரவுடன் கரையோர அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை நான் முன்னெடுத்து வருகின்றேன்.
0 Comments
No Comments Here ..