27,Apr 2024 (Sat)
  
CH
விளையாட்டு

வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 468 ரன்கள் குவிப்பு

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்டில் மக்மதுல்லா - தஸ்கின் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது.

வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது. 

முதலில் பேட் செய்த வங்காளதேச அணி தொடக்க நாளில் 8 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து இருந்தது. லித்தன் தாஸ் 95 ரன்னிலும், கேப்டன் மொமினுல் 70 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். மக்முதுல்லா (54 ரன்), தஸ்கின் அகமது (13 ரன்) களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இருவரும் சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை வலுவாக உயர்த்தினார்கள். 

முதல் அரைசதத்தைக் கடந்த தஸ்கின் அகமது 75 ரன்னில் வெளியேறினார். 9-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 191 ரன்கள் திரட்டியது. டெஸ்ட் போட்டியில் இந்த விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும்.

இறுதியில், வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 468 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. 5-வது சதத்தைப் பூர்த்தி செய்த மக்முதுல்லா 150 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 4 விக்கெட்டும், டிரிபானோ, நியுவாச்சி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி ஆட்ட நேரம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 468 ரன்கள் குவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு