08,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி இன்று (09) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

18 வயதிற்கு மேற்பட்ட ஆபத்துநிலை உடைய கர்ப்பிணித் தாய்மார்கள், 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், முன் களப் பணியாளர்களாக உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் அவர்களுடைய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் நாளை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசியேற்றும் திட்டத்தில் 2ஆம் கட்டத்தில் முதலாவது டோஸ் . கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழங்கப்பட்டுவருகிறது.


இத்திட்டத்தின்கீழ் ஜூலை மாதம் 5ஆம் திகதி முதல் நாளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 465 பேருக்கும், 6ஆம் திகதி இரண்டாம் நாளில் 9 ஆயிரத்து 457 பேருக்கும், 7ஆம் திகதி மூன்றாம் நாளில் 12 ஆயிரத்து 34 பேருக்கும், 8ஆம் திகதியான இன்றைய நான்காம் நாளில் 7 ஆயிரத்து 497 பேருக்கும் என மொத்தமாக 38 ஆயிரத்து 456 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்ljhf வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைகளிலும் நாளை சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு