01,May 2024 (Wed)
  
CH
இந்திய செய்தி

உதவி செய்ய வயது தடையில்லை

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முடங்கி இருந்த நேரத்தில் கூட பல்வேறு இடங்களில் அரசின் முறையான அனுமதி பெற்று பல சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவி தேவைப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்தனர். தொற்று தற்போது கட்டுக்குள் வந்திருந்தாலும் தேவைப்படுபவர்களுக்கு உரிய உதவிகளை வழங்க 'கொரோனா வைரஸ் வீரர்களான' சமூக சேவகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் வயதினர் முதல் நடுத்தர வயதினர் வரை பலர் தேவைப்படும் எவருக்கும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதன் மூலம் தன்னார்வலர்களாக இருந்து உதவ முன்வருகிறார்கள். இவர்களில் சிலர் சில உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமோ அல்லது மக்கள் குழுக்களின் உதவி மூலமோ அல்லது சொந்த நிதியை பயன்படுத்தியோ ஏதாவதொரு வகையில் உதவிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும் மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

சமூகத்திற்கு உதவி செய்ய (அதுவும் இந்த பெருந்தொற்று காலத்தில்) வயது ஒரு தடை அல்ல என்று நிரூபித்து வருகிறார் ஆந்திராவை சேர்ந்த 70 வயதான கே.ஆர்.ஸ்ரீனிவாஸ் ராவ். மூத்த குடிமக்களுக்கு அல்லது தொற்று நோய் பாதிப்பு காரணமாக வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத எவருக்கும் மருந்துகள், மளிகை பொருட்கள், ரேஷன் உட்பட பிற அத்தியாவசி பொருட்களை வழங்க தனது சைக்கிளிலேயே சென்று உதவி செய்து வருகிறார் இந்த 70 வயது நபர். தன்னார்வலராக இருந்து வரும் ஸ்ரீனிவாஸ் ராவ், 70 வயதிலும் அசராமல் சைக்கிளில் சென்று தேவைப்படுவோருக்கு உதவிகளை செய்து வருவது பல்வேறு இளைஞர்கள் தன்னார்வலர்களாக மாறி உதவி செய்திட பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.

Mr. Srinivas Garu ( 70 years old ) delivering the grocery for the covid patients

A inspirational person with golden heart to serve the needy

70 வயதிலும் அழைக்கும் குரலுக்கு ஓடி செல்லும் ஸ்ரீனிவாஸ் ராவ் ஓய்வு பெற்ற ஏர் இந்தியா ஊழியர் ஆவார். மேலும் ஹைதராபாத் ரிலீஃப் ரைடர்ஸ் (Hyderabad Relief Riders) என்ற உள்ளூர் தன்னார்வலர்கள் குழுவின் ஒரு பகுதியாகவும் உள்ளார். உதவிகள் கேட்டு வரும் கோரிக்கைகள் சரியானவையா மற்றும் நேர்மையானவையா இல்லையா என்பதை சரி பார்ப்பதிலும் இவர் ஈடுபட்டுள்ளார். மேற்கு மாரெட்பாளி பகுதியில் வசித்து வரும் ஸ்ரீனிவாஸ் ராவ், தனது வீட்டிலிருந்து ஆறு முதல் ஏழு கிலோமீட்டர் சுற்றளவில் இருந்து உதவி கேட்டு வரும் கோரிக்கைகளை நிர்வகிக்கிறார்.

சில அவசர சூழ்நிலை அல்லது போதுமான நிதி இல்லாதவர்களுக்கு உதவி வழங்கும் முயற்சிகளின் போது சில நேரங்களில் அவர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியங்களை தனது சொந்த காசிலிருந்து வாங்கி தந்து விடுகிறார் ஸ்ரீனிவாஸ் ராவ். தனது சேவை பற்றி கூறும் ஸ்ரீனிவாஸ் ராவ், நான் வாழும் சமுதாயத்திற்காக என்னால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறேன். உதவி கேட்பவர்களின் இருப்பிடங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்லும் பணி தனக்கு திருப்தி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

துவக்கத்தில் தொற்று நோய்க்கு மத்தியில் தன்னார்வலராக நான் வெளியே செல்வது குறித்து தன் மனைவி மிகவும் பயந்ததாகவும், இருந்த போதிலும் ஒரு கட்டத்தில் தன்னை முழுமையாக புரிந்து கொண்டு தற்போது தனது முடிவுக்கு ஒத்துழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் வெளிநாட்டில் வசிக்கும் இவரது பிள்ளைகள் தொற்று நேரத்தில் இவர் வெளியே சென்று சைக்கிளில் சுற்றி உதவிகளை செய்வது பாதுகாப்பானது இல்லை என்றும் இன்னும் கருதுவதாக கூறி உள்ளார்.

சிலர் தொற்று பாதிப்பின்றி கடைகளுக்கு செல்லும் நிலையில் இருந்தாலும் கூட, தங்கள் சேவைகளை தவறாக பயன்படுத்துவதை காண முடிவதாக குறிப்பிடுகிறார். இதுபோன்ற நபர்களை பார்க்கும் போது, நான் அவர்களுக்கு ஆலோசனை கூறுகிறேன், வீடுகளை விட்டு வெளியேறி அவர்களின் தேவைகளுக்கு ஷாப்பிங் செய்து கொள்ளுமாறு ஊக்குவிக்கிறேன் என்கிறார். உடற்பயிற்சி ஆர்வலராக இருக்கும் ஸ்ரீனிவாஸ் ராவ் சிட்டி மற்றும் சிட்டி சுற்றிய பகுதிகளில் பயணிக்க சைக்கிளை பயன்படுத்துகிறார். தினமும் 2 மணி நேரம் டேபிள் டென்னிஸ் விளையாடுகிறார்.


உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





உதவி செய்ய வயது தடையில்லை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு