21,May 2024 (Tue)
  
CH
சினிமா

படைப்பாளியின் கருத்து சுதந்திரத்தை பறிப்பது நல்லதல்ல

படைப்பாளியின் கருத்து சுதந்திரத்தை பறிப்பது நாட்டுக்கும் நல்லதல்ல, அரசுக்கும் நல்லதல்ல என்று ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு குறித்து க பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவு தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், ‘ காலம் மாறும்போது சட்டங்களும் மாறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சட்ட திருத்தம் அவசியம் தான் ; ஆனால் அது எந்த மாதிரியான திருத்தமாக இருக்க வேண்டும் என்பதை சம்மந்தப்பட்ட துறையினருடன் கலந்தாலோசித்து அரசு செயல்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

மேலும், ‘அனைத்து அமைப்புகளிலும் தீர்ப்பாயம் உண்டு. ஆனால் திரைத்துறை தீர்ப்பாயம் கலைக்கப்பட்டுவிட்டது. தீர்ப்பாயம் இருந்தால் தான் வசதியாக இருக்கும்.

திரைப்படத்துறைக்கு தனி விதிமுறைகளை கொண்டுவரலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக அதிகாரத்தை குவிப்பது சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்துவிடும்’ என்றும் அவர் தெரிவித்தார்.


விமர்சனமே கூடாது என்றால், படைப்பாளிக்கு அது தற்காலிக அழிவு தான் என்றும் ஆனால் அரசுக்கு அது காலத்துக்கும் அழிவாக அமையும் என்றும் தெரிவித்த ஆர்.கே.செல்வமணி, ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. படைப்பாளியின் கருத்து சுதந்திரத்தை பறிப்பது நாட்டுக்கும் நல்லதல்ல, அரசுக்கும் நல்லதல்ல என்று திட்டவட்டமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘அரசு சில நேரம் செவிட்டு தனமாக இருக்கலாம். அதனால் மக்களின் கூக்குரல் அதிகமாக இருக்கும். மக்களின் குரலுக்கு செவி கொடுக்காத அரசு இதுவரை நீடித்தது இல்லை. எனவே அரசு எங்களது கோரிக்கையினை பரிசீலிக்கும் என நம்புகிறோம்.

பாஜகவுக்கு ஒரு கோரிக்கை.இது திரைப்படத் துறைக்கும், அரசுக்கும் இடையே உள்ள விஷயம். இதை பாஜகவுக்கு எதிரானது என்பதைப் போல் திசைதிருப்ப வேண்டாம். இது பாஜகவுக்கே நல்லதல்ல’ என்று தெரிவித்தார்.

மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் ஆர்.கே. செல்வமணி கூறினார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





படைப்பாளியின் கருத்து சுதந்திரத்தை பறிப்பது நல்லதல்ல

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு