13,Mar 2026 (Fri)
  
CH
தொழில்நுட்பம்

இணையத்தில் வெளியிட 6 விவரங்கள்

கூகுள் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இத்தனை ஆண்டுகள் தொடர் அப்டேட் கிடைக்கும் என கூறப்படுகிறது.

கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி அதன் அம்சங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன. 

அவ்வாறு பிக்சல் 6 மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இரட்டை கேமரா சென்சார்களும் பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, மூன்று கேமரா சென்சார்களும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் கூகுள் பிரத்யேகமாக உற்பத்தி செய்யும் வைட்சேப்பல் பிராசஸர் வழங்கப்பட இருக்கின்றன.

இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் என்றும் இவற்றுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட் வழங்க கூகுள் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 4 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட், 5 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் அல்லது 5 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தற்போது விற்பனையில் இருக்கும் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மூன்று ஆண்டுகள் மென்பொருள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. 5 ஆண்டுகளுக்கு அப்டேட் வழங்கும் பட்சத்தில், அப்டேட் வழங்குவதில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களை கூகுள் பின்னுக்குத் தள்ளிவிடும். 

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





இணையத்தில் வெளியிட 6 விவரங்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு