யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிச்சுற்றில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலி.
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது.
இன்று அதிகாலை நடந்த போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, இங்கிலாந்து அணியுடன் மோதியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா 2-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இத்தாலிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் யாரும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
கோல் அடித்த லூக் ஷா
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67-வது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியனார்டோ போனுக்கி ஒரு கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..