ஐ.சி.சி. டி20 உலக கோப்பை 2021 போட்டிகள் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன.
பி.சி.சி.ஐ. நடத்தவுள்ள ஐ.சி.சி. டி20 உலக கோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும்.
இதற்கான அணிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சூப்பர் 12 பிரிவில் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டாக அணிகள் பிரிக்கப்பட்டு உள்ளன.
இவற்றில் குரூப் 1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகளும், குரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகளும் இடம் பெறும்.
இவை தவிர, குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ-வில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய 4 அணிகள் இடம் பெறும்.
குரூப் பி-யில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய 4 அணிகள் இடம் பெறும்.
குரூப் ஏ மற்றும் குரூப் பி அணிகளில் வெற்றி பெறும் அணிகள் முறையே குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகியவற்றில் இடம் பெறும்.
இதேபோன்று, குரூப் ஏ-வில் 2வது இடம் பெறும் அணி குரூப் 2விலும், குரூப் பி-யில் 2வது இடம் பெறும் அணி குரூப் 1லும் இடம் பெறும்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..