16,Apr 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பால் ஆபத்து? இலங்கைக்கு எச்சரிக்கையுடன் வந்த தகவல்

துருக்கியில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டு 250 இற்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை காவுகொண்ட கெலன் அமைப்பு தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கையை துருக்கி வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் வியாபித்துள்ள இந்த அமைப்பை அழிப்பதில் தாம் உறுதிபூண்டுள்ளதாக துருக்கிய அரசாங்கம் சூளுரைத்துள்ளது.

துருக்கியில் 2016 ஆம் ஆண்டு ஜுலை 15 ஆம் திகதி ஃபெட்டுல்லாஹிஸ்ட் பயங்கரவாத அமைப்பு என துருக்கி அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்படும் இந்த அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் 251 பேர் கொல்லப்பட்டதுடன் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், சர்வதேச அளவில் தற்போது வியாபித்துள்ள இந்த அமைப்பை முற்றிலுமாக அழிப்பது எளிதல்ல என சுட்டிக்காட்டியுள்ள துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன், சதி நடவடிக்கையை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக துருக்கி விழிப்புடன் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எர்டோகன் தனது நாடாளுமன்றக் குழுவிடம் உரையாற்றும் போது, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமது நாட்டு எல்லைகளுக்கு வெளியேயும் இந்த பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் அவர்களை ஒழிப்பதாக துருக்கிய ஜனாதிபதி சூளுரைத்திருந்த நிலையில், குறித்த அமைப்பின் உறுப்பினர்கள் மீது கவனம் செலுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை துருக்கி நாட்டு தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

FETO உறுப்பினர்களை ஒழிக்க இலங்கை அதிகாரிகள் அளித்த ஆதரவை துருக்கி மிகவும் பாராட்டுவதாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் ஆர். டெமெட் செர்கெர்சியோக்லு (கொண்டுள்ள நிலையில், அது தேசிய அச்சுறுத்தலுக்கு அப்பாற்பட்டது என்று தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பயங்கரவாத அமைப்பை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு அந்த அமைப்பு தொடர்பாக புரிந்துகொள்வது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1999 இல் அமெரிக்காவில் வாழ்ந்த முஸ்லீம் போதகரான ஃபெத்துல்லா கெலன் தலைமையில் Gகெலன் என்ற இஸ்லாமிய சகோதர இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தை அதன் பங்கேற்பாளர்கள் ஹிஸ்மெட் அல்லது செமாட் என்று அழைக்கின்றனர். எனினும் இந்த இயக்கத்தை 2015 முதல் துருக்கி அரசாங்கம் FETO எனப்படும் Fetullahist Terrorist Organization அதாவது ஃபெட்டுல்லாஹிஸ்ட் பயங்கரவாத அமைப்பு என்று அடையாளப்படுத்துகின்றது.





வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பால் ஆபத்து? இலங்கைக்கு எச்சரிக்கையுடன் வந்த தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு