தமது பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாக ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் நேற்றைய தினம் நடைபெற்றுள்ள செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்துள்ளன.
அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய யால்வல பஞ்ஞாசேகர தேரர் கருத்து தெரிவிக்கையில்,
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்துச்செய்யும் வரை பணி பகிஷ்கரிப்பு தொடரும் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை எதிர்வரும் 22ஆம் திகதி நாடளாவிய அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொள்ளும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் ஒன்லைன் மூல கல்வி பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் நேற்று ஏழாவது நாளாகவும் தொடர்ந்த நிலையில் நாடளாவிய ரீதியில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..