19,May 2024 (Sun)
  
CH
சினிமா

கவின் வெப் தொடரில் அறிமுகமாகும்

நடிகர் கவின் நடிப்பில் உருவாகி உள்ள ‘லிப்ட்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்ட கவின், ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். இவர் தற்போது ‘லிப்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், நடிகர் கவின், அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஆகாசவாணி என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வெப் தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த வெப் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




கவின் வெப் தொடரில் அறிமுகமாகும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு