கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய குழு ஆய்வு செய்யும்.
கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 22,000-க்கும் மேல் பதிவாகி உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா கட்டுக்குள் இருக்கும்நிலையில் கேரளாவில் மட்டும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அம்மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இந்த குழு ஆய்வு செய்யும்.
இதற்கிடையில் கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, வருகிற சனி, ஞாயிறு (ஜூலை 31, ஆக.1) நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..