உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு, முடியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உடலை ஆரோக்கியமாகவும், மனதை உற்சாகமாகவும் வைத்திருந்தால் இளநரையை பெருமளவு தவிர்த்துவிடலாம்.
பொதுவாக நாற்பது வயதை நெருங்கும்போதுதான் முடி நரைக்கத் தொடங்கும். முடிக்கும், சருமத்திற்கும் மெலனின் என்ற பொருள்தான் கருப்பு நிறத்தை தருகிறது. இதனை உற்பத்தி செய்யக்கூடிய மெலானோசைட் திசுக்களின் செயல்திறன் குறையும்போது தான் நரை தோன்றுகிறது. வயதாகும் முன்பே, அதாவது 25 வயதிற்கு முன்பு நரை தோன்றினால் அது அகால நரையாகும்.
ஆனால் சிலருக்கு 20 வயதுக்கு முன்புகூட நரைக்கத் தொடங்கிவிடுகிறது. முடியில் வெயில் அதிகம்படுவது அதன் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். முதலில் முடி உதிர்தல், பின்பு முடி வெடித்து கீறுதல் போன்ற பாதிப்புகள் தோன்றி, அடுத்து அகால நரைக்கு கொண்டு செல்லும். வீரியம் அதிகம் கொண்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் முடியின் வேர்களை பாதிக்கும். அது முடி உதிர்வையும், இளநரையையும் தோற்றுவிக்கும். அதற்கு பதிலாக பொருத்தமான ஆர்கானிக் ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம்.
பொதுவான உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு, முடியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உடலை ஆரோக்கியமாகவும், மனதை உற்சாகமாகவும் வைத்திருந்தால் அகால நரையை பெருமளவு தவிர்த்துவிடலாம்.
புரோட்டின் நிறைந்த கோழி இறைச்சி, சிவப்பு இறைச்சி வகைகள், பால் பொருட்கள், பயறு- பருப்பு வகைகளை சாப்பிடுவது முடியின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. முட்டையில் இருக்கும் புரோட்டினும், பயோட்டினும் முடிக்கு அதிக நலன் சேர்ப்பவை.
நேந்திரன் பழம், காளான், பாதாம், கீரை வகைகள், மீன் வகைகள், ஈரல் போன்றவைகளையும் உட்கொள்ளுங்கள். முடியின் நிறத்தை பாதுகாக்கும் தன்மை இந்த உணவுப் பொருட்களுக்கு இருக்கிறது. குடைமிளகாய், வெள்ளரிக்காய், முட்டைகோஸ் ஆகியவைகளும் ஏற்றது.
உடல் எடையை கட்டுக்குள்கொண்டு வர சிலர் உணவு சாப்பிடாமலே இருந்துவிடுவார்கள். இது தவறான நடைமுறையாகும். உணவு சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது. சத்துக்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் முடி உதிர்தல், முடியில் கீறல் விழுந்து வெடித்தல் ஆகியவை ஏற்படுவதோடு நரையும் உருவாகும்.
முடி எப்போதும் கருப்பாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஒன்றிரண்டு நரை ஏற்படும் போதே அதில் கவனம் செலுத்தி, டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். அதிகமாக நரை விழுந்த பின்பு சிகிச்சைக்கு செல்வது அதிக பலனைத்தராது. அகால நரை தோன்றும்போதே சிகிச்சைக்கு முன்வாருங்கள். சத்துக்குறைபாடு, ஹார்மோன் குறைபாடு போன்றவைகளை கண்டறிந்து சரிசெய்தால் அது முடியின் நலனுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல்நலனுக்கும் சிறந்தது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..