டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெறும் பெண்களுக்கான 100 மீட்டர் அரை இறுதியில் பங்கேற்க இருந்த நைஜீரிய வீராங்கனை ஒகாபர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
நைஜீரியாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை பிளஸ் சிங் ஒகாபர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெறும் பெண்களுக்கான 100 மீட்டர் அரை இறுதியில் பங்கேற்க தகுதி பெற்று இருந்தார்.
அவர் நேற்று நடந்த தகுதி சுற்றில் 11.05 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முன்னேறினார்.
இந்த நிலையில் நைஜீரிய தடகள வீராங்கனை ஒகாபர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அவர் உடல் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்கான ஊக்க மருந்தை பயன்படுத்தி இருந்தது தெரிய வந்தது.
கடந்த 19-ந்தேதி நடந்த போட்டியில் அவர் ஊக்க மருந்தை உட்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து தடகள ஒருமைப்பாட்டுக் குழு அவரை தற்காலிகமாக சஸ்பெண்டு செய்துள்ளது.
இந்த சஸ்பெண்டு காரணமாக இன்று நடைபெறும் 100 மீட்டர் பந்தயத்தில் அவரால் பங்கேற்க முடியாது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..