04,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

75வது சுதந்திர தின கொண்டாட்டம் கொடியேற்றினார் மோடி

சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டையை சுற்றி பாதுகாப்புக்காக ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, 5 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. 

விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலையில் தனது இல்லத்தில் இருநது புறப்பட்ட பிரதமர் மோடி, முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். 

பின்னர் விழா நடைபெறும் செங்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணை மந்திரி அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். அதன்பின்னர் பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். 

அதன்பின்னர், பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தேசியக் கொடி ஏற்றும் போது முதல் முறையாக இரு விமான படை விமானங்கள் மூலம் மலர்கள் துவப்பட்டன. 

விழாவில் மத்திய மந்திரிகள், முப்படைகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் பங்கேற்றனர். 

வழக்கமாக செங்கோட்டையில் ஒவ்வொரு முறையும் சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொள்வர். ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நிறைய பேரை அழைக்கவில்லை. 

இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் வென்ற வீரர்கள், இந்திய விளையாட்டு ஆணையத்தை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் மட்டும் இன்றைய சுதந்திர தின நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்கள் பங்கேற்றனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடடுள்ள முன்களப் பணியாளர்களுக்கென தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. 

சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டையை சுற்றி பாதுகாப்புக்காக 350 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, 5 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் அமர்த்தப்பட்டு உள்ளனர்.  

இதேபோல், உலகெங்கிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் சார்பிலும் 75-வது சுதந்திர தின விழா நடைபெறுகின்றன. பல்வேறு நாடுகளில் உள்ள கட்டிடங்கள், சுற்றுலா தலங்கள் மூவர்ணத்தில் ஒளிர வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





75வது சுதந்திர தின கொண்டாட்டம் கொடியேற்றினார் மோடி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு